மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்து!

மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் அரசாங்கத்தினை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நுகேகொடை கூட்டம் வெற்றியளித்துள்ளது. பொய்கள்மூலம் இனியும் நாட்டை ஆளமுடியாது என்பதை இனியாவது ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

அரசாங்கத்துக்கான மக்கள் ஆதரவு சரிந்துவிட்டது.

அவ்வாறு இல்லை, மக்கள் ஆதரவு தமக்கு இருக்கின்றது என அரசாங்கம் கூறுமானால், அதன் உண்மை தன்மை என்னவென்பதை அறிய மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்- என சாகர காரியவசம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply