இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வலைத்தளம் குறித்து குற்றச்சாட்டு- எம்.பி ஹர்ஷ டி சில்வா!

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வலைத்தளம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இன்றைய (26) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை தேடிவிதார்.

இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்,

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வலைத்தளத்தில் ஜனாதிபதி மற்றும் அமைச்சரின் புகைப்படங்கள் உள்ளன. மேலும் நடத்தப்பட்ட மாநாடுகள் தொடர்பான புகைப்படங்களும் உள்ளன.

ஆனால், அமைச்சின் இலக்குகள் குறித்து சிங்களம் மற்றும் தமிழில் எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இலங்கை அரசாங்கத்தின் எந்தவொரு வலைத்தளத்திலும் மூன்று மொழிகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என சட்டம் உள்ளது. அதனை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அமைச்சு என்ன செய்கின்றது என்பது குறித்து நாட்டு மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு இருந்தால் நாட்டு மக்கள் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு குறித்து எவ்வாறு புரிந்துகொள்வார்கள்? என கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply