க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் 3 தினங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது!

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் தற்போது நடைபெற்று வந்த நிலையில், நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பிற்போடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று (27), நாளை (28) மற்றும் நாளை மறுதினம் (29) ஆகிய தினங்களில் நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெறாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்குப்பதிலாக பரீட்சைகளுக்கான மாற்றுத் தினங்களாக டிசம்பர் மாதம் 07, 08 மற்றும் 09 ஆகிய தினங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இன்று (27) நடைபெறவிருந்த பாடப் பரீட்சை – டிசம்பர் 07 ஆம் திகதியும், நாளை (28) நடைபெறவிருந்த பாடப் பரீட்சை – டிசம்பர் 08 ஆம் திகதியும், சனிக்கிழமை (29) நடைபெறவிருந்த பாடப் பரீட்சை – டிசம்பர் 09 ஆம் திகதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply