வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு- அம்பாறையில் சோகம்!

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரைவாகுப்பற்று, பொலிவேரியன் குடியிருப்புப் பகுதியில், வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (27) முற்பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் அறிந்த அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினர், சாய்ந்தமருது பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ செயற்படையணி மற்றும் பொலிஸார் இணைந்து உடனடியாக மீட்புப் பணிகளை முன்னெடுத்து, கால்வாயில் மூழ்கிய காரினை மீட்டனர்.

காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆண், பெண் மற்றும் சிறுமி ஆகிய மூவரும் மீட்கப்பட்டு உடனடியாக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply