சீரற்ற வானிலையால் ஏற்படும் அவசர நிலைமைகள் தொடர்பில் தெரியப்படுத்த 117 என்ற இலக்கத்திற்கு அழையுங்கள்!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதனால் ஏற்படும் அவசர நிலைமைகள் தொடர்பில் தெரியப்படுத்துவதற்கு 117 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இடம்பெயர்ந்தவர்களுக்கான பாதுகாப்பு நிலையங்களை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply