வடக்கு, கிழக்கு தமிழர் தேசங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக ஏற்பாடுசெய்யப்பட்டு வருகின்றன.
மண்ணுக்காக தமது வாழ்வை அர்ப்பணித்து மாவீரர்களை நினைவுகூரும் பொருட்டு தமிழர் தேசம் எங்கும் மாவீரர்களை பறக்கவிடப்பட்டு, மாவீர்ர்களை நினைவுகூறுகின்ற பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டு உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் இன்றையதினம் (27) கொட்டும் மழையிலும் நினைவேந்தல் நினைவாலயங்களை நோக்கி மக்கள் தன்னெழுச்சியாக சென்றுவருவதை அவதானிக்க முடிகின்றது.
