மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் விபத்து

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் ஆறுமுகத்தான்குடியிருப்பில் இன்று ஞாயிற்றுகிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

கொம்மாதுறை கலைவாணி வீதியைச் சேர்ந்த கிட்ணபிள்ளை குபேந்திரன் (வயது 46)என்பவரே உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

ஆறுமுகத்தான்குடியிருப்பிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில் பங்குகொண்டு தனது சைக்கிளில் பிரதான வீதியூடாக வீடு திரும்பும்போது பின்னால் வந்த டிப்பர் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

சடலம் ஏறாவூர் ஆதரார வைத்தியசாலையில் உடற்கூற்றாய்வுப் பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.

டிப்பர் வண்டியின் சாரதி ஏறாவூர்ப் பொலிஸார் கைதுசெய்து மேலதிக விசாரணைகளில் ஈடுட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir