அநுராதபுரம் – புத்தளம் வீதியில் கலாவெவ பாலத்தின் மேல் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 70 பயணிகளுடன் பயணித்த பேருந்து ஒன்று சுமார் ஒன்றரை மணி நேரமாக அதே இடத்தில் நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை இன்றைய (28) நாடாளுமன்ற அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷண நாணாயக்க,
அவர் சொன்ன அநுராதபுரம் சம்பவம் சரிதான். அந்த பஸ்ஸிற்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தும் அதனை மீறி சென்றுள்ளது. எனவே சிக்கியுள்ளது. அங்கு 60 பேர் இருப்பதாகவே தகவல் கிடைத்துள்ளது. தற்போது 2 இராணுவப் பிரிவுகள் களத்தில் செயற்படுகின்றன. அத்துடன் ஒரு ஹெலிகொப்டரை அழைக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது- என பதில் அளித்தார்.
