நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலையால் அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் மற்றும் நாள் விடுப்புகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த நடைமுறை எதிர்வரும் 30ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப். யூ. வுட்லர் தெரிவித்தார்.
தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக, ஒரு அதிகாரி தான் நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சேவைக்குச் சமூகமளிக்க முடியாவிட்டால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் சேவைக்குச் சமூகமளிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
அவசர அனர்த்த நிலைமைகளுக்கான துரித அழைப்பு இலக்கங்கள்:
அவசர அழைப்பு இலக்கங்கள்: 117, 119
சுவசரிய சேவை: 1990
தீயணைப்புப் பிரிவு: 110
இராணுவத் தலைமையகம்: 113
விமானப்படைத் தலைமையகம்: 116
ஆகிய இலக்கங்களுக்கு அழைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
