தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலையால் கொழும்பின் பல பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
சில வீதிகளில் மரங்கள் விழுந்துள்ளதுடன், நீர் நிரம்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
தற்போது தடைப்பட்டுள்ள வீதிகள் பின்வருமாறு:
பிரேமசிறி கேமதாச மாவத்தையில் லயனல் திரையரங்கம் அருகிலும், கெப்பெட்டிப்பொல மாவத்தையிலும்
தேசிய வைத்தியசாலை 4ஆம் இலக்க வாயில் அருகிலும்
எல்விட்டிகல மாவத்தை
இராணி வீதிச் சந்தி
கொட்டாஞ்சேனை ஆர்மர் பார்பர் சந்தி, விகாரை அருகில்
