குடிநீரைப் பயன்படுத்துவது தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள அறிவித்தல்!

குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது ஏற்பட்ட அனர்த்த நிலைமையின் போது வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் உள்ள கிணற்று நீரைப் பருகுவதைத் தவிர்க்குமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட தெரிவித்துள்ளார்.

இவற்றை பருகுவதால் காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற நிலைமைகள் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதால், மக்கள்
கொதித்தாறிய நீரை அருந்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் தற்போது ஏற்பட்ட அனர்த்த நிலமையால் வீடுகளைச் சுற்றிலும் நுளம்புகள் பெருகும் அபாயம் உள்ளது. எனவே நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பில் கவனம் செலுத்தாவிட்டால் டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும் சமில் முத்துக்குட தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply