மருமகன் மீது மாமனார் வாள் வெட்டு- யாழில் சம்பவம்!

யாழ்.வடமராட்சி துன்னாலை பகுதியில் வாள் வெட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வடமராட்சி துன்னாலையை வேம்படி பகுதியை சேர்ந்த 31 வயதுடைய சிவகுமார் நிதீஸ்குமார் என்பவரே வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (30) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

மாமன் மற்றும் மருமகனுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் வாள்வெட்டாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் மாமன், மருமகன் மீது வாளால் வெட்டியதில் மருமகன் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை தாக்குதல் நடத்திய மாமனாரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply