சிலாபம் வைத்தியசாலையிலிருந்து, புத்தளம் வைத்தியசாலைக்கு ஹெலிகொப்டரில் அழைத்துவரப்பட்ட குழந்தைகளும் தாய்மார்களும்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக சிலாபம் ஆதார வைத்தியசாலைக்குள் வெள்ளம் புகுந்ததால், அங்கு சிகிச்சை பெற்று வந்த 06 குழந்தைகள் உட்பட அவர்களின் தாய்மார்களும் நேற்று (30) புத்தளம் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இரத்மலானை இல 04 படைப்பிரிவைச் சேர்ந்த பெல்–412 ஹெலிகாப்டர் மூலமாக இந்தத் தாய்மார்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக அழைத்து வரப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply