இலங்கையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையில் மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்கும் பொருட்டு இந்திய கடற்படைக் கப்பல் INS சுகன்யா திருகோணமலைக்கு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இதனை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், தமது எக்ஸ் கணக்கில் பதிவொன்றை இட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.
அனர்த்த நிலைமையில் உதவும் பொருட்டு ஏற்கனவே இந்திய அரசாங்கத்தின் சார்பாக, இந்திய கடற்படைக் கப்பல்களான INS விக்ராந்த் மற்றும் INS உதயகிரி ஆகியவை கடந்த 28ஆம் திகதி நிவாரணப் பொருட்களுடன் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.
அத்துடன் இந்திய மீட்பு பணியாளர்களும் இலங்கையில் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
