நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொழும்பு – கண்டி தனியார் பேருந்து சேவை இன்று (02) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மத்திய மாகாண சாலை பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் அஜித் பிரியந்த தகவல் வெளியிட்டுள்ளார்.
தற்போது கண்டியிலிருந்து கொழும்புக்கு இயக்கப்படும் 18 குளிரூட்டப்பட்ட பேருந்துகள் கலகெதர பாதை வழியாக இயக்கப்படுகின்றன.
கொழும்புக்கு இயங்கும் வழக்கமான பேருந்துகள் கலகெதர மற்றும் குருநாகல் வழியாக இயக்கப்படும் என்று அதிகாரசபையின் தலைவர் அஜித் பிரியந்த தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
