மீதமுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
அத்துடன் அனர்த்தத்தால் பாதிக்கப்படாத பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியல் கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 08ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், அனர்த்தத்தால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் டிசம்பர் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
