இ.போ.சபையின் 1,500 பேருந்து பயணங்கள் இரத்து- ஆசனங்களை முன்பதிவு செய்த பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவித்தல்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையால், ஏற்பட்ட வீதித் தடைகள் காரணமாக இலங்கை போக்குவரத்துச் சபையின் சுமார் 1,500 பேருந்து பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த பேருந்துகளில் பயணத்தை மேற்கொள்ளும் பொருட்டு 15,000 பயணிகள் முன்கூட்டியே ஆசனங்களை முன்பதிவு செய்துள்ளதாக, இலங்கை போக்குவரத்துச் சபையின் ஆசன முன்பதிவு சேவையை மேற்கொள்ளும் ‘ஹான்ஸ் குளோபல் ஹோல்டிங்ஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேருந்து பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் முன்பதிவு செய்த ஆசனங்களுக்காக, தமக்கு விரும்பிய வேறொரு தினத்தில் ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளதாக ஆசன முன்பதிவு சேவையை நடத்தும் ‘ஹான்ஸ் குளோபல் ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்தின் செயற்பாட்டு அதிகாரி விமல் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்காக 1315 அல்லது 070 3110 506 என்ற இலக்கங்களைத் தொடர்புகொண்டு வேறொரு வசதியான தினத்தைப் பெற்றுக்கொள்ளுமாறும், இதற்காக எவ்வித மேலதிகக் கட்டணமும் அறவிடப்பட மாட்டாது என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

தற்போது நுவரெலியா, நாவலப்பிட்டி, 87 ஆம் இலக்க யாழ்ப்பாண வீதி, வலப்பனை, மூதூர், பிபில ஆகிய இடங்களுக்கான பேருந்து சேவைகள் இயங்கவில்லை என்றும், ஏனைய இடங்களுக்கான பேருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் ஆசனங்களை முன்பதிவு செய்ய முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply