தேசிய அடையாள அட்டைகள் முதலான போலி ஆவணங்களைத் தயாரித்த நபர் ஒருவர் இலஞ்ச அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை, கொரகபொல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, 2023ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 124ஆம் பிரிவை மீறி செயற்பட்ட காரணத்தினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைதான நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
