நெடுந்தீவுக்கு தெற்கு கடற்பகுதியில் மிதந்து வந்த பொதிகள்!

நெடுந்தீவுக்கு தெற்கு கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மிதந்து வந்த 09 பொதிகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் கடந்த 03ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

மீட்கப்பட்ட பொருட்களை சோதனையிட்ட வேளையில் 160,000 வெளிநாட்டு சிகரெட்டுகள், 150 அழகுசாதன கிரீம்கள், லோஷன்கள் மற்றும் 10 கைக்கடிகாரங்கள் என்பன அதில் காணப்பட்டுள்ளன.

கடற்படையினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில், அதனை கண்டா கடத்தல்காரர்கள் பொதிகளை கடலுக்குள் வீசி விட்டு தப்பி சென்று இருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக நெடுந்தீவு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply