மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனபலை பிரதேசத்தில், காணி எல்லைப் பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாக்குதலுக்கு உள்ளாகிய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோபிவத்தை, கோனபலை பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (05) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்குள்ளான நபர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் வேத்தர வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 71 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொரகஹஹேன பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
