வெலிமடை – நுவரெலியா வீதி போக்குவரத்திற்காக மீள திறக்கப்பட்டது!

நாட்டில் நிலவிய அனர்த்த நிலமையால் மூடப்பட்டிருந்த வெலிமடை – நுவரெலியா வீதி போக்குவரத்திற்காக இன்றைய தினம் மீள திறக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவிய அனர்த்த நிலமையால் கடந்த மாதம் 29ஆம் திகதி வெலிமடை பொலிஸ் நிலையத்திற்கு அண்மையிலுள்ள கெப்பட்டிப்பொல பகுதியில் ஏற்ப்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக வெலிமடை – நுவரெலியா வீதி மூடப்பட்டிருந்தது.

அனர்த்தத்தினால் சேதமடைந்திருந்த வீதியில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு தற்போது நிறைவுற்ற நிலையில் வீதி மீள திறக்கப்பட்டுள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply