மனித பாவனைக்கு உதவாத 12,000 கிலோகிராம் இறைச்சிக்கு சீல்- அனுராதபுரத்தில் சம்பவம்!

அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கால்நடை பண்ணையொன்றில் மனித பாவனைக்கு பொருந்தாத நிலையை அடைந்த 12,000 கிலோகிராம் இறைச்சிக்கு பொது சுகாதார பரிசோதகர்களால் நேற்றையதினம் (7) சீல் வைக்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு (1926) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த இறைச்சித் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சம்பந்தப்பட்ட கால்நடை பண்ணையை பொது சுகாதார பரிசோதகர்கள் சோதனையிட்டு, கண்டுபிடிக்கப்பட்ட இறைச்சித் தொகைக்கு சீல் வைத்ததாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் போரலஸ்ஸ தெரிவித்தார்.

அத்துடன் குறித்த இறைச்சியின் மாதிரிகள் இன்றையதினம் (8) அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

பகுப்பாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் போரலஸ்ஸ மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply