குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்த நிறுவனம்- ஒரு மில்லியன் ரூபா அபராதம்!

குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்த பெலிஹுல்ஓயா மற்றும் பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள விடுதி மற்றும் தனியார் நிறுவனமொன்றிற்கு ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

பெலிஹுல்ஓயா பிரதேசத்தில் உள்ள குறித்த விடுதியானது, 100 ரூபாவிற்கு விற்கப்பட வேண்டிய ஒரு லீற்றர் குடிநீர் போத்தல் ஒன்றை 400 ரூபாவிற்கு விற்பனை செய்திருந்தது.

குறித்த விடயம் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நிறுவனத்திற்கு எதிராக பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் குறித்த விடுதிக்கு ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதித்து உத்தரவிட்டது.

அதேவேளை, 70 ரூபாவிற்கு விற்கப்பட வேண்டிய 500 மில்லி லீற்றர் குடிநீர் போத்தல் ஒன்றை, 230 ரூபாவிற்கு விற்பனை செய்த பண்டாரவளை, எல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனமொன்றிற்கு எதிராகவும் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போதும் குறித்த நிறுவனத்திற்கும் ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதித்து பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply