பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலான இறுதி தீர்மானம் இன்று!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்டிருந்த பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான சரியான திகதி தொடர்பில் இன்று நடைபெறும் கூட்டத்தில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ (Nalaka Kaluweva) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் 500க்கும் மேற்பட்ட பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 100,000க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவு காரணமாக இறந்த பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிபரங்கள் இன்னும் பெறப்படவில்லை.

பல மாணவர்களின் அனைத்து பாடசாலை புத்தகங்கள், பைகள் மற்றும் காலணிகள் சேதமடைந்துள்ளன.

பதுளை, அனுராதபுரம், பொலன்னறுவை, கண்டி மற்றும் பிற பகுதிகளில் சேதமடைந்த அனைத்து பாடசாலைகளும் தற்போது திருத்தம் செய்யப்பட்டு வருவகின்றது.

அத்துடன் அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களின் மன நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply