பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை- வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கும் குருநாகல் மாவட்டத்திற்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவிப்பு, இன்று இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த பிரதேசங்களில் உள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply