அனர்த்த உதவிகளை ஒருங்கிணைக்கும் தேசிய குழு இன்று (10) இரண்டாவது நாளாகவும் கூடவுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை முறையாக ஒருங்கிணைத்து, உரிய நபர்களுக்கு வழங்குவதற்காக தேசிய அளவிலான குழு ஒன்றை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த ஆம் திகதி நியமித்திருந்தார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தலைமையில் நியமிக்கப்பட்ட இந்த குழு, வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் உதவிகள் மற்றும் உபகரணங்கள் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சரியாகக் கிடைப்பதை உறுதி செய்யும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
