நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகி உள்ளார்.
முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் விவசாய அமைச்சை நடத்துவதற்காக இராஜகிரிய பகுதியில் ஒரு கட்டிடத்தை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்டமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் பெறுவதற்காக இவ்வாறு அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பான காலத்தில் அவர் முன்னாள் அமைச்சரவை அமைச்சராகவும், முன்னாள் வெகுசன ஊடகத்துறை அமைச்சராகவும் கடமையாற்றியிருந்தார்.
அதன்படி அவர் இன்று (11) காலை 9 மணியளவில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகி, சுமார் 2 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் ஆணைக்குழுவில் இருந்து வௌியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
