88 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது!

88 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் அத்துருகிரிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வாத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணத்தைப் பெற்று மோசடி செய்து தலைமறைவாகியிருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் குழுவொன்றுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஜபா மாவத்தை பகுதியில் வைத்து நேற்று (11) பிற்பகல் கைதுசெய்யப்பட்டார்.

இந்த பண மோசடிகள் தொடர்பில் மொரட்டுவ, காலி, வரக்காபொல மற்றும் பாணந்துறை ஆகிய நீதவான் நீதிமன்றங்களினால் சந்தேகநபருக்கு எதிராக 88 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply