நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல கைது!

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல செலுத்திய ஜீப் வண்டி, மற்றுமொரு காருடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

குறித்த விபத்து சம்பவம் சப்புகஸ்கந்த, தெனிமல்ல பகுதியில் நேற்று (11) இரவு இடம்பெற்றது.

இந்தநிலையில் விபத்து சம்பவம் தொடர்பில் சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையம் விசாரணைகளை முன்னெடுத்து வந்தது.

விசாரணையின் அடிப்படையில் ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியமை மற்றும் விபத்தைத் தவிர்க்காமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்ற போது காரில் பயணித்த 25 வயதுடைய பெண், அவரது 6 மாதக் குழந்தை மற்றும் 55 வயதுடைய பாட்டி ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

6 மாதக் குழந்தை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply