களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு கடும் மின்னல் குறித்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த பிரதேசங்களில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்னல் குறித்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (12) நண்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
