போலி நாணயங்கள் தொடர்பிலான எச்சரிக்கை!

பண்டிகை காலத்தில் போலி நாணயங்கள் அதிகரித்துள்ளதால், இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யூ.வுட்லர் தெரிவித்தார்.

போலி நாணயங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், தமது கைகளுக்குக் கிடைக்கும் நாணயத்தாள்களை அவதானித்து பரிசோதிக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் போலி நாணய புழக்கத்தை தடுக்க மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யூ.வுட்லர் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply