சட்டவிரோத அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டவர்கள் கைது!

புதுக்குடியிருப்பு – தேவிபுரம் பிரதேசத்தில் புதையல் தேடும் நோக்கில் காணியொன்றில் சட்டவிரோத அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த நபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அநுராதபுரம், இனாமலுவ, மொரகொட மற்றும் கலேவெல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 35 முதல் 48 வயதுக்கு இடைப்பட்ட நான்கு ஆண் சந்தேக நபர்களும், மடாட்டுகம மற்றும் தேவிபுரம் பிரதேசங்களைச் சேர்ந்த 36 மற்றும் 45 வயதுடைய இரண்டு பெண் சந்தேக நபர்களுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply