விபத்துக்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக ரன்வலவின் மருத்துவ அறிக்கை இதுவரை பொலிஸாருக்குக் கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ அறிக்கை கிடைத்த பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக ரன்வல தொடர்பில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 11ஆம் திகதி (வியாழக்கிழமை) முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல செலுத்திய ஜீப் வண்டி, மற்றுமொரு காருடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்தின் போது காரில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 25 வயதுடைய பெண், அவரது 6 மாதக் குழந்தை மற்றும் 55 வயதுடைய பாட்டி ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியமை மற்றும் விபத்தைத் தவிர்க்காமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல கைது செய்யப்பட்டு பிணையில்விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
