16 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியவருக்கு விளக்க மறியல்

திருகோணமலை தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினாறு வயதுடைய சிறுமியொருவரை அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது நேற்று உத்தரவிட்டார்.

தம்பலாகமம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வெளிநாடொன்றில் இருந்து சென்று தம்பலாகாமம் பகுதியில் பதினாறு வயதுடைய சிறுமியொருவரை காதலித்து சிறுமியின் பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்துச் சென்று சந்தேக நபரின் நண்பர் ஒருவரின் வீட்டில் சிறுமியோடு தங்கியிருந்த நிலையிலே சிறுமியின் பெற்றோர் தம்பலாகாமம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்து சந்தேக நபரை கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முற்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir