நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையின் போது மண்சரிவு அபாயத்திற்குள்ளான மத்திய மாகாணப் பாடசாலைகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
அதன்படி கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலை வளாகங்களின் நிலைமையை பல்கலைக்கழகங்களின் உதவியுடன் மதிப்பிடும் பணி தற்போது நடைபெறுகிறது.
இது தொடர்பிலான மதிப்பீட்டு பணி கடந்த 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், பேராதனை, மொரட்டுவ மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களின் நிபுணர்கள் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளைக் கொண்ட 15 விசேட நிபுணர் குழுக்கள் இணைந்து குறித்த பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
