வவுனியா – செட்டிகுளம் – வீரபுரம் பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, தவசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
தொலைபேசி உரையாடல் ஒன்றின் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் குழுவொன்றினால் குறித்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.
காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் 19 மற்றும் 22 வயதுடைய மூன்று சந்தேக நபர்களை செட்டிகுளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
