அம்பலாங்கொடை நகரில் இன்று (22) காலை துப்பாக்கி சூட்டு சம்பவம் பதிவாகியது.
அம்பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர் மீது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
இந்தநிலையில் துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குருந்துவத்த – அந்ததோல சாலையில் கைவிடப்பட்ட நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
