ஆசிரியர் சங்கங்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
பாடசாலை நேரத்தை மாற்றுவது தொடர்பில் ஜனவரி மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் உரிய பதில் வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளன.
கல்விச் சீர்திருத்தங்களுடன் பாடசாலை நேரத்தை மாற்றுவது தொடர்பிலான சந்திப்பு ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையில் இன்றையதினம் (22) கல்வி அமைச்சில் நடைபெற்றது.
இதன்போது தொழிற்சங்க நடவடிக்கையை டிசம்பர் 12 ஆம் திகதி முன்னெடுக்கவிருந்த போதும் அதனை மேற்கொள்ளவில்லை என தொழிற்சங்கங்கள் இங்கு சுட்டிக்காட்டின.
இன்றைய தினம் பிரதமர் தமது கருத்துக்களுக்கு ஓரளவு செவிசாய்த்ததாகவும், அது குறித்து பரிசீலிப்பதாக அவர் தெரிவித்ததாகவும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.
