போதைப்பொருள் கடத்தல்காரரான ‘குடு ரொஷான்’ என்பவர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்குளிய பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து குறித்த நபரை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபரிடம் இருந்து 9 மி.மீ. ரக பிஸ்டல் ஒன்றும், அதற்குப் பயன்படுத்தப்படும் 3 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
