அம்பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர் மீது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக செயற்பட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை காலை அம்பலாங்கொடையில் உள்ள வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த இனம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள், முகாமையாளரைச் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர்.
துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் குருந்துவத்த – அந்ததோல சாலையில் கைவிடப்பட்ட நிலையில் போலீசாரால் மீட்கப்பது.
துப்பாக்கிச்சூட்டின் பின்னர் துப்பாக்கிதாரிகள் இருவரும் பயணித்த குறித்த மோட்டார் சைக்கிளை அந்த இடத்திற்கு கொண்டு வந்தவர் இவரே என பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
