சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய குழுவின் உறுப்பினரும், ஜிசாங் தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவின் செயலாளருமான, வாங் ஜூன்ஷெங் (Wang Junzheng) காலி கோட்டையில் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
வாங் ஜூன்ஷெங் தலைமையிலான சீனக் குழுவினர், நேற்றுக் காலை காலி கோட்டைக்குச் சென்று கோட்டைச் சுவர்களை ஆய்வு செய்தனர்.
பிரதி அமைச்சர் நளின் ஹேவகே மற்றும் பலர் கலந்துகொண்ட இந்த பயணத்தின் போது சிறப்பு அதிரடிப்படையினர், காவல்துறையினர், கடற்படையினர் பலத்த பாதுகாப்பு வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
