அம்பாறையில் விபத்து மூவர் படுகாயம்

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாண்டிருப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்று இரவு பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் சிறிய ரக டிப்பர் வண்டி ஆகியன நேருக்கு நேர் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொள்கலன் வண்டி ஒன்றினை முந்திச்செல்லும் முயற்சியினால் இவ்விபத்து இடம்பெற்றதாக நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மற்றும் சிறிய ரக டிப்பர் வண்டியின் சாரதி ஆகியோர் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir