சீதுவையில் உள்ள இரவு விடுதியில் பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த குழு கைது!

சீதுவையில் உள்ள இரவு விடுதி ஒன்றின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் குழுவொன்றை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் குறித்த நிறுவனத்தின் முகாமையாளர், வர்த்தகர் ஒருவர், மூன்று முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் மற்றொரு நபர் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதான நபர்களிடம் இருந்து 6 பெட்ரோல் குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply