தம்மிக்க பிரசாத் அமெரிக்க அணியின் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக நியமனம்!

இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் அமெரிக்க அணியின் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரை இலக்காகக் கொண்டு குறித்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவருக்கு அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

2026 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்க கிரிக்கெட் அணி ஜனவரி மாதம் 10ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.

அவர்கள் தமது உலகக் கிண்ணப் பயிற்சிகளை இலங்கையிலிருந்து ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

உலகக் கிண்ணத் தொடரின் ஆரம்பத்தில் அமெரிக்கா அணி தமது முதல் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது.

இந்தப் போட்டியானது பெப்ரவரி 7ஆம் திகதி வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply