யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலம் கிரிக்கெட் மைதானத்திற்கு ஏற்றதல்ல என்று இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
“நிலம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது, சுற்றுச்சூழல் நிபுணர்கள் குறித்த நிலம் கிரிக்கெட் மைதானத்திற்கு ஏற்றதல்ல என்று கூறியுள்ளனர். எனவே, இந்த திட்டத்திற்கு சில ஆட்சேபனைகள் உள்ளன,” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆண்டு செப்டம்பரில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் இலங்கையின் ஏழாவது சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் யாழ் மண்டைதீவில் உள்ள 48 ஏக்கர் நிலத்தில் நாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க்கது.
