பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொரளை ,ஒருகொடவத்தை மற்றும் தெமட்டகொட பகுதிகளை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சந்தேகநபர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் தாய்லாந்தின் பேங்காக்கில் போதைப்பொருளை பெற்று, இந்தியாவின் மும்பைக்குச் சென்று, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (29) வந்தடைந்துள்ளனர்.
கைதான நபர்களிடம் இருந்து 200 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான 20 கிலோ மற்றும் 684 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
