முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.

இந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பு தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் நேற்று கூறியிருந்தார்.

எனினும் டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் தொடர்பில் இதுவரை எவ்வித சிக்கல்களும் ஏற்படவில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் இதுவரை பதிவாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது முறைப்பாடுகள் இருப்பின் அவற்றை முறையாக சமர்பிக்கும் பட்சத்தில், அவற்றை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply