துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நீடிப்பு!

துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

முன்னதாக, 2025 செப்டம்பர் மாதம் 01ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை மட்டுமே உரிமங்களைப் புதுப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது நிலவும் அனர்த்த நிலைமையைக் கருத்திற் கொண்டு ஜனவரி 31ஆம் திகதி வரை ஒரு மாதத்தால் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் உரிமம் இன்றி துப்பாக்கி வைத்திருப்பது, துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் 22ஆவது பிரிவின் விதிகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply