குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைபாட்டாளித்துள்ள கல்வி அமைச்சின் செயலாளர்!

கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார்.

கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது, 6-ஆம் தர பாடத்திட்ட தொகுதியில் இடம்பெறக்கூடாத விடயம் ஒன்று உள்வாங்கப்பட்டுள்ளதாகவும், வெளித்தரப்பு ஒன்றினால் சதித்திட்ட அடிப்படையில் இவ்வாறான கருத்துக்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக தாம் சந்தேகிப்பதாக தெரிவித்து இந்த முறைப்பாட்டை அளித்துள்ளார்.

இவ்வாறான முறையற்ற செயலைச் செய்த நபர்கள் குறித்து உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த வெளியீடு இன்னும் இறுதிப் பதிப்பாக அச்சிடப்படவில்லை என்றும், இதன் பொறுப்பு கல்வித் திணைக்களத்தையே சாரும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த சர்ச்சைக்குரிய பகுதி சட்டபூர்வமாக வெளியிடப்படவில்லை என்பதையும், பாடத்திட்டத்தில் இது எவ்விதத்திலும் உத்தியோகபூர்வமாக உள்வாங்கப்படாது என்பதையும் செயலாளர் களுவெவ உறுதிப்படுத்தினார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply