இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இந்த கூட்டம் இன்று முற்பகல் 11 மணியளவில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

பொதுத் தேர்தலின் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே கருத்து முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக தேசியப் பட்டியல் உறுப்பினராக தவராசா கலையரசன் நியமிக்கப்பட்டமை தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சி தன்னிச்சையான தீர்மானம் மேற்கொண்டதாக பங்காளிக் கட்சிகளான டெலோ மற்றும் புளொட் என்பன அதிருப்தி வெளியிட்டிருந்தன.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற குழுவின் அமைப்பாளர் உள்ளிட்ட சில பதவி நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று இடம்பெறவுள்ள நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் இந்த விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இதன்போது, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூல வரைபுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir